அக்டோபர் 24 ஆம் தேதியே ரிலீசாகும் ‘பிகில்’…!

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டது. தீபாவளி நாளான அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், இரண்டு நாட்களுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர் .

தற்போது இந்த தேதியை மாற்றி, ஒரு நாள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 24 ஆம் தேதியே, (விழாயக்கிழமைய) படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

பண்டிகை நாட்களில் தனது படம் வெளியாவதை விரும்பும் விஜய்க்கு, ’பிகில்’ ரிலீஸ் தேதியில் நடந்த இந்த திடீர் மாற்றம் ஏமாற்றமாக அமைந்தாலும், தொடர் விடுமுறையை குறிவைத்து தயாரிப்பாளர் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி