தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் ‘பிகில்’….!

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பிகில்’ படத்துக்கு போட்டியாக எந்த படமும் வெளிவர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி ‘பிகில்’ படத்தை திரையிடுவதற்கு அதிகப்படியான திரையரங்குகள் முன்வந்துள்ளதாகவும், இதன் காரணமாக ‘பட்டாஸ்’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு திரையிடும் திட்டத்தை தள்ளிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24-ம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்ட்டூன் கேலரி