அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலாகக் காத்திருந்த பிகில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதனிடையே, இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது .

அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.