பீகார்: 4257 சிறப்பு ஆசிரியர் பணிக்கு 5லட்சம் விண்ணப்பங்கள்

பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசியராக பணியாற்ற காலியாக உள்ள 4257 இடங்களுக்கு 5லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் பிஎச்டி படித்த பட்டதாரிகளாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு 4257 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
guest
இதன்படி அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து சிறப்பு ஆசியர் பணிக்கு 5 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பட்டுள்ளன. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்” 4257 காலிப்பணியிடங்களுக்கு 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகும். அவர்களின் 80 சதவிகித்ததினர் பி.டெக், எம்.டெக் படித்த பொறியியல் பட்டதாரிகளாக இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது” என்று தெரிவித்தனர்.

இவர்களில் 83 சதவிகித்தினர் ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதன் மூலம் பொறியியல் படித்த பட்டாரிகளுக்கு வேலை வாய்ப்பு மிக குறைவாகவே இருப்பதால் பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்ததாக பொறியியல் பட்டதாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

You may have missed