டில்லி:

பீகார் அராரியா தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் அந்த பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம்த் அராரியா தொகுதி இடைத்தேர்தலில் லாலு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அராரியா தொகுதி எல்லைப்பகுதியை ஒட்டிமட்டும் இல்லை, நேபாளம் மற்றும் வங்காளதேசத்துக்கு அருகேயும் இருக்கிறது. அந்த நாட்டை சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் கொடிய சிந்தாத்தங்களை கொண்டவர்கள். இது பீகார் மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்தாகும்.

விரைவில் அராரியா தொகுதி தீவிரவாதிகளின் கூடாரமாகவும், சங்கமிக்கும் இடமாகவும் மாறும்’’ என்றார். இதற்கு ராப்ரி தேவி பதில் கூறுகையில், ‘‘இந்தியாவில் அனைத்து பயங்கரவாதிகளும் பாஜக அலுவலகத்தில் தான் இருந்திருக்கிறார்கள். பீகார் மற்றும் உ.பி. மக்கள் சரியான பதிலை கொடுத்துள்ளார்கள். அராரியா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் 2019ம் ஆண்டு தேர்தலிலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” என்றார்.