நாளை பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் 10 மாநில இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை…

டெல்லி: பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், 10 மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவுகளின் வாக்கு எண்ணிக்கையும் நாளை ( செவ்வாய்க்கிழமை)  நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் காலியாக இருந்த 54 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி,  சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் காலியாக இருந்த 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியும், மணிப்பூரில் காலியாக இருந்த 2 தொகுதிகளுக்கு நவம்பர் 7 ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதனிடையே பிகார் சட்டபேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது, மேலும் பிகாரில் காலியாக இருந்த ஒரு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில், இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது நாளை (நவம்பர் 10) நடைபெற உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.