என்ஆர்சி -க்கு எதிரான தீர்மானம் – பீகார் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

பாட்னா: பீகார் மாநில சட்டசபையில் என்ஆர்சி -யை அமல்படுத்தக்கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது நாளில் என்ஆர்சி -க்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை(NPR) அதன் 2010 வடிவத்தில் செயல்படுத்தும் வகையிலான ஒரு தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினர்.

முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் என்பிஆர் மற்றும் என்ஆர்சி போன்றவை குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார், “தேசிய மக்கள்தொகை பதிவு(என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை நீக்கக்கோரி பீகார் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது” என்று கூறியிருந்தார்.