பிப்ரவரி 15 அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைகிறார்.

டில்லி

ரும் 15 ஆம் தேதி அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்.

பீகார் மாநில பாஜகவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் கீர்த்தி ஆசாத். இவர் பீகாரில் உள்ள தர்பங்கா தொகுதியில் மூன்று முறை மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி அன்று கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தனது தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.

அவர் ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தகக்கது

இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தமது தர்பங்கா தொகுதியில் இருந்து போட்டியிட கீர்த்தி ஆசாத் முடிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.