கடந்த 2014 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் , காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இந்தியா எங்கும் மக்களின் ஆளும்கட்சி  காங்கிரசுக்கு எதிரான  மனநிலையை  மோடியின் பிரச்சாரம் மூலம்  பா.ஜ.க  அறுவடை செய்தது.
அப்போது, பீகார் சாசரம் நாடாளுமன்ற  தனித்  தொகுதியில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் செட்டி பாஸ்வான். இவர் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராக் குமாரை வீழ்த்தியவர்.
2014 -தேர்தல்  வேட்புமனுவில், தன் மீதுள்ள குற்றவழக்குப் பின்னனியை இவர் நிரப்பவில்லை எனக் குற்றம் சாட்டி இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இவருக்காக வாதாடிய “சஞ்ஜய் குமார் மனு” தனது கட்சிகாரர் எந்த தவறும் செய்யவில்லை.வேட்பு மனுவில், இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டிக்கப் பட்ட அல்லது தண்டிக்கபடக் கூடிய பிரிவுகளில் வழக்கு இருந்தால்  விவரம் பூர்த்தி செய்யப்படவேண்டும்,. என் கட்சிக் காரர் மீது அவ்வாறு எந்த வழக்கும் இல்லை. எனவே இதில் விதிமீறல் ஏதும் இல்லை. என்றார்.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், செட்டி பாஸ்வானின் எம்.பி.  தேர்வு செல்லாது என அறிவித்துள்ளது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக வழக்கறிஞர் கூறினார்.