பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா: தனி வார்டில் சிகிச்சை

--

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் அவரது மருமகள் தங்கி உள்ள நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பின்னர் மருத்துவமனை ஒன்றில் தனி வார்டில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. பாட்னா மருத்துவ கல்லூரி பிறப்பித்த உத்தரவின்படி, 6 டாக்டர்கள், 3 செவிலியர்கள் ஆகியோர் முதலமைச்சரின் அரசு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து காக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.