உலகளாவிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்! 36லட்சம் பேர் பயன்

--

பாட்னா:

பீகார் முதல்வர் உலகளாவிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலத்தில் சுமார் 36 லட்சம் முதியோர்கள் பயன்பெறுவார்கள் என அறிவித்து உள்ளார். இதற்கான ஆண்டு ரூ.1800 கோடி செலவாவதாகவும் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு முதல்வர் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்து வருகிறார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தை பீகார் அரசு  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததது. அதன்படி, அரசு நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தவிர, அனைத்து ஜாதி, சமூகம், மதம் ஆகியவற்றிற்கும் பொருந்தாமல், பழைய வயது ஓய்வூதிய திட்டம், (MMVPY) என்று அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி,   60 வயதிற்கு மேலாக மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 400 மாதாந்த ஓய்வூதியம், அரசாங்கத்திலிருந்து அறிவித்தார், 60 வயதிற்கு மேலாக பத்திரிகையாளர்களுக்காக 6,000 ரூபாய் ஓய்வூதியத்தை முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக ஆண்டுக்கு ரூ.1800 கோடி ரூபாய் செலவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை நிதிஷ்குமார் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 36 லட்சம் முதியோர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள்

பீகார் அரசின் தற்போதைய ஓய்வூதியத் திட்டமானது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.

முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY (Mukhyamantri Vridhajan Pension Yojna)

60 வயதைக் கடந்த அனைவருக்குமான முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY என்ற மாநிலம் தழுவிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களைத் தவிர சாதி, மதம் மற்றும் சமூகம் என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் மாத ஓய்வூதியமாக 400 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.

பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா (BPSY – Bihar Patrakar Samman Yojana)

மேலும் பீகார் மாநில முதல்வர் 60 வயதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் 6000 ரூபாயை மாத ஓய்வூதியமாக அறிவித்துள்ளார்.

ஊடகத் துறையில் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எந்தவொரு ஓய்வூதியத்தையும் பெறாத பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா என்ற திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.

இந்த இரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன.