ஃபரூக் அப்துல்லா மீது தேச துரோக வழக்கு : நீதிமன்றம் உத்தரவு!

பாட்னா

ர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதற்காக ஃபரூக் அப்துல்லா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா.  இவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஆவார்.  இவர் சமீபத்தில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்குத் தான் சொந்தம்.   பாகிஸ்தானுடன் இந்தியா எத்தனை முறை போரிட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை” என ஒரு நிகழ்வில் உரையாற்றி உள்ளார்.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை அளித்திருந்தார்.    அதில் ஃபரூக் அப்துல்லா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.  இதை விசாரித்த நீதி மன்றம்  காவல்துறை உடனடியாக ஃபரூக் அப்துல்லா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி