Random image

பீகார்: பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு….டாக்டருக்கு தர்ம அடி

பாட்னா:

பாலியல் பலாத்கார குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தர்ம அடி வாங்கியுள்ளார்.

பீகார் மாநிலம் கதிகார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அந்த பெண் மருத்துவமனை செவிலியர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து நர்சுகள் ஒன்று சேர்ந்து டாக்டரை அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.