நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
கூட்டணிக்கு தலைவனான நிதிஷ்குமார் 43 இடங்களை பெறுகிறார். அவருடன் கைகோர்த்த பாஜக 74 இடங்களை பிடிக்கிறது..
இன்னொரு பக்கம் லாலுவின் கட்சி 75 இடங்களைப் பிடித்து மயிரிழையில் முந்தி முதல் இடத்தில் இருக்கிறது .. அதனுடன் கூட்டு சேர்ந்த காங்கிரஸ் 19 தொகுதிகளுடன் காமெடியாக நிற்கிறது..
நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து திடீரென பிரிந்து போன ராம்விலாஸ் பஸ்வான் மகன் 30 இடங்களில் நிதிஷ்குமார் வெற்றியை காலி செய்திருக்கிறார்..
இன்னொரு பக்கம் முஸ்லிம் கட்சியின் தலைவரான ஓவைசி.. அவர் தனியாக நின்று புகுந்து லாலு அண்ட் காங்கிரஸ் கோஸ்ட்டீயை 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதம் பார்த்து இருக்கிறார். ஒவைசியின் நடவடிக்கை பிஜேபிக்கு சாதகமாக அமைந்து உள்ளதால் அவரை பிஜேபியின் பி டீம் என்று வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர் ..
பீகார் தேர்தல் களத்தில் என்ன நடந்திருக்கின்றன என்பதை விவரிக்கிறது இன்னொரு புள்ளி விவரம்..
கடந்த சட்டமன்ற தேர்தலில் தலா 87 ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு தொகுதியை கைப்பற்ற முடிந்த லாலு கட்சி இம்முறை ஒரு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளது.
லாலு மட்டுமல்ல நிதிஷ்குமார் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவையும் இம்முறை ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிகாண பெரிய அளவில் வாக்குகளை கூடுதலாக பெற வேண்டியிருந்திருக்கிறது..
ஆனால் இதே வேளையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை வெல்ல சராசரியாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டியிருந்த பாஜக, இம்முறை வெறும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே ஒரு தொகுதியை கைப்பற்ற முடிந்துள்ளது.
இதிலேயே பீகாரின் தேர்தல் கள பின்னணி நிலவரம் புரிந்திருக்கும்..
பிஜேபி இடம்பெற்றுள்ள கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் காத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று..