பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக மாநில அரசு அறிவித்து உள்ளது..

பீகார் மாநிலத்தின்ல் முதுபெரும் அரசியல்வாதியான  ஜெகன்னாத் மிஸ்ரா. மூன்று முறை பீகார் முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்தவர். 1970, 80களில் பீகார் மாநிலத்தின் சக்தி வாய்ந்த காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். பின்னர் காங்கிரஸ் தலைமையுடன் எற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகி, பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி,  ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார்.

இவர்மீது மாட்டுத்தீவன வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜெகன்னாத் மிஸ்ராவிற்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

அதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மிஸ்ரா, கடந்த உடல்நலக்குறைவு காரணமாக  2018 ஜூலையில்  ஜார்க்கண்ட உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெகனாத் மிஸ்ரா,  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 82.

ஜெகன்னாத் மிஸ்ரா மறைவிற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  பீகார் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதை உடன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.