நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை! பீகார் முதல்வர்

பாட்னா:  தோனி பட நடிகர் சுஷாந்த் சிங், மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. இதை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதிபடுத்தி உள்ளார்.

தோனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங், இவர் கடந்த மாதம், மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள தான், தங்கியிருந்த வீட்டில்,  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்ட நிலை யில், அவரது மரணத்தில் மர்மம் இருப்தாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அவரது நண்பர்கள், பெண் நண்பர்கள், காதலி என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு சார்பில்  மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.