பீகார் : பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட மறுப்பு

--

 

சீதாமார்கி, பீகார்

சீதாமார்கியின் பாஜக கூட்டணியான ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் வருண் குமார் மக்களவை தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளில் போட்டி இடுகின்றன.   மீதமுள்ள ஆறு தொகுதிகளில் மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடுகிறது.

வருண்குமார்

ஐஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 17 தொகுதிகளில் சீதாமார்கி தொகுதியும் ஒன்றாகும்.

சுனில் குமார் பிண்டு

இந்த தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வருண் குமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தது.    சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த சுனில் குமார் பிண்டு இந்த தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

அவர் ஏற்கனவே  இந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

 

இந்நிலையில் வருண் குமார் இன்று தனக்கு அளிக்கப்பட்டுள்ள தொகுதியில் போட்டியிட போவதில்லை என ஐ ஜ த தலைவரும் பீகார் முதல்வருமான நிஷித் குமாரிடம் தெரிவித்துள்ளார்.   தனது தொகுதியில் தனக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை என காரணம் கூறி உள்ளார்.