கொரோனாவின் கோர தாண்டவம்: பீகாரில் மேலும் ஒரு அமைச்சர் கொரோனாவுக்கு பலி!

பாட்னா: பீகாரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்,  மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு அமைச்சர் உயிரிந்துள்ளார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தில் இதுவரை 2,01,887 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  981 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 1,90,256 தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளதுடன், தற்போதைய நிலையில், 10,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான கபில் தியோ காமத் (வயது 70)  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், , சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, பீகாரில் கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுஅமைச்சர் வினோத்குமார் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மீண்டு நிலையில், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.