பாட்னா: பீகாரில் அமைச்சர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்பூரைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர், பாட்னாவில் தனது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர் இன்று மாநில தலைநகரிலிருந்து கதிஹார் திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பரிசோதனை அறிக்கையைப் பற்றி அறிந்ததும், முதலில் கதிஹார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், பின்னர் நகரத்தில் உள்ள ஒரு ஓட்டலின் தனிமை வார்டுக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சருடன் தொடர்புடைய நபர்ககளின் மாதிரிகளை சேகரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக ஜூன் 22 அன்று, பாஜக எம்எல்ஏ ஒருவர் கொரோனா வைரஸ் சோதனை செய்தார். அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக பாட்னாவின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.