அதிரடி தீர்ப்பு: 15வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை!

15வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றாவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

raj_ballabh_yadav

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ராஜ்பல்லவ் யாதவ் இருந்து வருகிறார். இவர் 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்த நிலையில் எம்.எல்.ஏ. ராஜ்பல்லவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ. ராஜ்பல்லவிடம் அழைத்து சென்ற சுலேகா தேவி என்ர பெண்ணையும், அவரது தாய் ராதா தேவி, சோட்டி குமரி, துளசி தேவி, மோத்தி ராம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றாம்சாட்டப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து ராஜ்பல்லவ் யாதவை நீக்கியதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்பல்லவ் யாதவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 15ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ராஜ்பல்லவ் உட்பட 5பேரை குற்றவாளியாக அறிவித்தார். இந்நிலையில், சிறுமியை வன்கொடுமை செய்த ராஜ்பல்லவ் உள்ளிட்டோருக்கு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், “ சிறுமியை வன்கொடுமை செய்த ராஜ்பல்லவ் யாதவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரசுராம சிங் யாதவ் உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.