பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் உடன்பாடு: 140 தொகுதியில் ஆர்.ஜே.டி போட்டி.?

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘மகா பந்தனம்’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் போட்டியிட உள்ளன.

இந்த கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன.

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஆர்.ஜே.டி. கட்சி 140 இடங்களில் போட்டியிட முடிவாகியுள்ளது.

கடந்த தேர்தலில் 42 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 90 தொகுதிகளைக் கோரியது.ஆனால் அந்த கட்சிக்கு 70 இடங்கள்  ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

 மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளுக்கு மொத்தமாக 25 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான விகாஷீல் இன்சான் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படும்.

‘’தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி அறிவிப்பு இன்னும் 72 மணி நேரத்தில் அறிவிக்கப்படும்’’ என இந்த கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்

-பா.பாரதி.