பாட்னா:

பா.ஜ.க, பிரமுகர் மொபைல் போனை திருடிய குற்றவாளியை, நடிகை நயன்தாரா புகைப்படத்தைக் கொண்டு பீஹார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பீகார் போலீஸ் அதிகாரிகள் தகவல்கள் அளித்துள்ளனர்.  அந்த தகவலில் ”பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 150 கி.மீ., தொலைவில் உள்ள தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க, பிரமுகர் சங்கய் குமார் மகடோ.  இவருடைய விலை உயர்ந்த மொபைல் போன் சமீபத்தில் திருடு போய்விட்டது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   இந்த திருட்டு வழக்கை மதுபாலா தேவி என்ற போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தினார்.

அந்த மொபைல் போனை டிரேஸ் செய்ததில் முகமது ஹஸ்னெயின் என்பவர் அதை  பயன்படுத்தி வருவது தெரியவந்தது. போலீசார் பலவகையில் முயன்றும் முகமதை பிடிக்க முடியவில்லை.   இதனால்; அவரை பிடிக்க மதுபாலா புதிய திட்டத்தை கையில் எடுத்தார்.  அதன்படி மதுபாலா, சாதாரண பெண் போல், முகமதுவை தொடர்பு கொண்டு, காதலிப்பதாக கூறினார். ஆனால், இதனை முகமது நம்பவில்லை.

மதுபாலா விடாமல் முகமதுவை தீவிரமாக காதலிப்பதாக கூறியதால் முகமது நம்பினார்.

அவரைப் பார்க்க வேண்டி அவரின் புகைப்படத்தை அனுப்புமாறு முகமது கூறினார்.  மதுபாலா, நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை அனுப்பினார். அத்துடன் தனது மொபைல் ப்ரொஃபைலிலும் நயன்தாரா படத்தை வைத்தார்.  அவர் அனுப்பிய படத்தில் உள்ளது நடிகை நயன்தாரா என தெரியாமல், அழகில் மயங்கிய முகமது, மதுபாலா குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார்.

அங்கு பர்ஹா அணிந்திருந்த மதுபாலா தேவி, மறைந்திருந்த போலீசார் மற்றும் பொது மக்கள் உதவியுடன் முகமதுவை கைது செய்தனர்.   அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மொபைல் போனை தான் திருடவில்லை எனவும், வேறொரு நபரிடமிருந்து திருடியதாக வாக்குமூலம் கொடுத்தான். அவன் குறிப்பிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுபாலாவை பாராட்டி, போலீசார் பரிசு வழங்கினர்”.என தெரிவிக்கப்பட்டுள்ளது.