லாலு கட்சிக்கு எதிராக போஸ்டர்கள்..

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் ஆரம்பித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ( ஆர்.ஜே.டி) 24 ஆம் ஆண்டு விழா பாட்னாவில் நேற்று நடைபெற்றது.

’’24 ஆம் ஆண்டு’’ என ஆர்.ஜே.டி. கட்சியினர் போஸ்டர் அச்சடித்து பாட்னா நகரம் முழுவதும் ஒட்டி இருக்க, பக்கத்தில் ‘’ 24 சொத்துக்கள் ‘ என ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போட்டி போஸ்டரை ஒட்டி இருந்தார்கள்.
அந்த போஸ்டரில் ’’லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் வாங்கியுள்ள சொத்துக்கள் ‘’ என குறிப்பிட்டு, 24 சொத்துக்களை பட்டியல் போட்டிருந்தது, ஐக்கிய ஜனதா தளம்.

ஆர்.ஜே.டி. கட்சிக்கு புதிய வியாக்கியானத்தையும் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொடுத்து இருந்தது.
‘ ராஷ்டிரிய ’’சால்சாஜ்’’ ( ஏமாற்று) தளம்’ என லாலு கட்சியை கிண்டல் அடித்து அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

லாலு முதல்வராக இருந்தபோது நடந்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டு வரும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ், நேற்று நடந்த கட்சி ஆண்டு விழா மேடையிலும்.,’’ எங்கள் ஆட்சியில் நடந்த தவறுகளை மன்னித்து விடுங்கள்’ என்று வாக்காளர்களை கேட்டுகொண்டார்.
-பா.பாரதி.