பாட்னா,

டமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் உடைப்பு போன்ற இயற்றை பேரிழிவு நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் பீகாரில் சமீபத்தில் கனமழை காரணமாக அரரியா மாவட்டத்தில் தரைப்பாலம் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது அந்த பாலத்தின்மீது பயணம் செய்த 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் காட்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அசாம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் கனமழை பெய்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் பாலங்கள் இடிந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரரியா

இந்நிலையில்  கனமழையால் பாதிக்கப்பட்ட அரரியா மாவட்டத்தில் உள்ள  தரைப்பாலத்தில் ஆபத்தை உணரால், பல பேர் கடந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்த்ந  3 பேர் பாலத்தைக் கடக்க முயன்ற போது வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டனர்.

பீகாரில் இதுவரை வெள்ளம் காரணமாக அரரியா மாவட்டத்தில் 20 பேரும், வடக்கு சம்பரான் மாவட்டத்தில் 14 பேரும், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் 13 பேரும், மாதேபுராவில் 12 பேரும், சிடமாகியில் 11 பேரும், கிஷன்கஞ்ச்-ல் 8 பேரும், புர்னியாவில் 5 பேரும், டர்பங்காவில் 4 பேரும், சஹரசாவில் 3 பேரும், ஸ்ஹெகரில் 2 பேரும், சுபால் மாவட்டடத்தில் ஒருவரும் பலியாகி உள்ளதாக பீகார் பேரிடர் மீட்பு அமைப்பின்அதிகாரி பிரத்யாய் அமிரித் தெரிவித்து உள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.