பீகார்: ஓசியில் பழம் தர மறுத்த சிறுவன் கைது

இலவசமாக பழம் தர மறுத்த காய்கறி கடைச்சிறுவனை,  காவலர்கள் கைது செய்து அடித்து உதைத்த சம்பவம் பீகார் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையடுத்து இக்குற்றச் செயலில் ஈடுபட்ட 12 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பீகாரின் பாட்னா மண்டல காவல்துறை தலைவர் என்.எச்.கான் தெரிவித்திருப்பதாவது:

 

 

” ஒரு காய்கறிக்கடையில் பலாப்பழத்தை இலவசமாக தரமறுத்த சிறுவனை காவலர்கள் கைது செய்துள்ளது  நிரூபணமாகியுள்ளது. கைது செய்ததோடு அச்சிறுவனை சிறுவன் என்றும் பாராமல் அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 12 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  இவர்கள் அனைவர் மீதும் பணியிடைநீக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரடியாகத் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அவரது  உத்தரவின்படி விரிவான விசாரணையை எனது தலைமையிலான குழு மேற்கொண்டது. விசாரணை அறிக்கை நேற்றுதான் பீகார் மாநில காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு வந்தது.

அறிக்கையில் கண்டறிந்த தகவல்கள் அனைத்தும் சிறுவனிடம் எந்தத் தவறும் இல்லையென்றும் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் இரக்கமற்று நடந்துகொண்ட காவலர்களே சட்டத்திற்குப் புறம்பாக மோசமாக செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன” என்றார்.

 

 

 

You may have missed