சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜார் சாலையில், தனது நண்பருடன் பைக்கை வீலிங் செய்தபோது, பின்னால் அமர்திருந்த வாலிபர்  கீழே விழுந்து மரணத்தை தழுவினர். இது சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை உள்பட பல இடங்களில் இளைஙர்களில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவது வாடிக்கை யாகி வருகிறது. பைக் ரேஸின்போது, பைக்கை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக பைக் ரேஸுக்கு தைடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று மெரினா சாலையில் பைக் ரேஸ் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடற்கரை காமராஜர் சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலரை காவல்துறையினர் விரட்டியடித்த நிலையில், அதையும் மீறி சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வேகமாக சென்ற பைக் ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாது. இதில் அந்த பைக்கின் பின்னார் அமர்ந்திருந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். பைக் ஓட்டியவர் ஹெட்மெட் அணிந்திருந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில் பல்சர் 220சிசி பைக்கை ஓட்டி வந்த இளைஞர் பெயர் பாலாஜி (வயது 19) என்றும், அவரது பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் பெயர் ஆர்.சாந்தகுமார். சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் என்றும்,. பிகாம் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.