பைக் ரைடு செய்த விஜய்யின் பிகில் வீடியோ….!

அட்லி இயக்கத்தில் , விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்தில் விஜய், அப்பா (பிகில்) மற்றும் மகன் (மைக்கெல்) என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், சிங்கப்பெண்ணே என்ற பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்திற்காக விஜய் ஹெல்மெட் இல்லாமல் பைக் ரைடு செய்யும் வீடீயோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையின் ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோட்டில் நடந்து வந்த பிகில் படத்தின் படப்பிடிப்பில் தான் விஜய் ஹெல்மெட் அணியாமல் பைக் ரைடு செய்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி