முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், தனது அந்தரங்க உதவியாளர் மோனிகா லெவென்ஸ்கியுடன் உடனான தொடர்பு குறித்து, மனத் திறந்துள்ளார்…. மன அழுத்தத்திலிருந்து மீளவே மோனிகா லெவென்ஸ்கி யுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டுகளில் முன்னாள் அதிபர் பில்கிளின்டன்- மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் விவகாரம் அமெரிக்க அரசியலை புயலை கிளப்பியது.. பில்கிளின்டன்  அமெரிக்க அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் அவரது அந்தரங்க உதவியாளராக பணியாற்றினார் மேனிகாலெவின்ஸ்கி என்ற இளம் பெண்.  அப்போது இருவருக்கும் உடல்ரிதியிலான அந்தரங்க உறவு இருந்ததாக,  இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மோனிகா லெவின்ஸ்கி தெரிவித்தார்.

இது பெரும் புயலை கிளப்பிய நிலையில், முதலில் மறுத்த கிளின்டன், மரபணு சோதனையில் குட்டு வெளியானதைத் தொடர்ந்து உண்மையினை ஒப்புக்கொண்டார்.  இதைத்தொடர்ந்து, கடந்த 1998-ம் ஆண்டு குடியரசு கட்சியைச் சேர்ந்த அவரது ஆதரவு எம்.பி.க்கள் பார்லிமென்ட்டில் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி தீர்மானம் நிறைவேற்றினர்..இது கிளின்டனின் புகழுக்கு பெரும் அவமானத்தை தேடித்தந்தது.

இந்த விவகாரம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் பில் கிளின்டன்…. அமெரிக்காவின் ”ஹுலு” வெஃப் தொலைக்காட்சியில், ”ஹிலாரி-அனைவரும் அறிந்த பெண்மணியின் தனிப்பட்ட வாழ்க்கை”  என்ற டாகுமென்டரி வெளியானது. அதில், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஹிலாரி கிளின்டன் கடந்து வந்த பாதை ஆவணத்தொடராக வெளியாகி உள்ளது… அதில் பில்கிளிண்டன் உள்பட பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துஉள்ளனர்.

இந்த தொடரில் ஹிலாரி கிளின்டனின் கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான  பில் கிளின்டன் ஓப்பனாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்…. அதில், மேனிகாலெவின்ஸ்கி உடனான தொடர்பு குறித்து வெளிப்படை யாக தெரிவித்து உள்ளார்.

ஹிலாரி கிளின்டன் முதலில் மாகாணத் தலைவர், செனட் உறுப்பினர் எனத் தொடங்கிய அவரின் வாழ்க்கை அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் வரை தொடர்ந்தது குறித்து தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட, ஹிலாரியின்  கணவரும் அமெரிக்காவின் முந்நாள் அதிபருமான பில்கிளிண்டன், தன் பதவிக் காலத்தில் தனிச்செயலர் மோனிகா லெவென்ஸ்கியுடனான தொடர்பு பற்றி மனம் திறந்து விரிவாக கூறியுள்ளார்.

அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்வில் பல வலிகளும், ஏமாற்றங்களும், இழப்புகளும், வன்மங்களும் இருக்கும். தனக்கும் அவ்வாறே பல மன அழுத்தங்கள் உண்டு. அதனை மறக்க மேற்கொண்ட வழிகளில் ஒன்றே தனது உதவியாளர் மோனிகா லெவென்ஸ்கியுடனான தொடர்பு, “இது தனக்குள் இருந்த மன அழுத்தத்திற்கான மருந்தாகவே  அமைந்தது”

 “இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தியதால் தன்னைவிட லெவென்ஸ்கிக்கே அதிகத் துயரத்தை எற்படுத்தியது, இந்நிகழ்வால் அவரின் வாழ்க்கை ஞாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டதாகவே நான் உணர்கிறேன்” என்று 20 ஆண்டுகளுக்கு முன்பான சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

மோனிகாவால் அதைக் கடந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது பெரும் சவாலாக இருந்தது என தெரிவித்த கிளின்டன், ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அவரின் திருமணம், குடும்பம், மற்றும் பதவியுடன் தொடர்புபடுத்தி சிக்கலாக்குவது ஏன் எனவும் ஊடகத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.

கிளின்டனின் ஓப்பன் டாக் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.