கொரோனாவும், பில்கேட்சும்…  சிறப்புக்கட்டுரை…

ன்று சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக மக்களை தெறிக்கவிட்டு வருகிறது கொரோனா எனப்படும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி…  இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான உலக மக்களின் உயிர்களை பறித்துள்ளது.

உயிர்க்கொல்லி வைரஸான  கொரோனா வைரஸ் தாக்கம் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறது என்று ஒருபுறம் உலக பொருளாதார வல்லுநர்கள் கூக்குரலிட்டு வருகின்றனர்…

இன்னொருபுறம்  இது ஒரு ‘பயோ வார்’, சீனாக்காரன் எதிரி நாடுகளை நிலைகுலைய வைக்க கையாண்ட தந்திரம் என்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன…

இவை அனைத்துக்கும் மேலாக வேறொரு அரசியலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது… அதுதான் மைக்ரோசிப் அரசியல்… அது என்ன மைக்ரோப் சிப் அரசியல்…

இந்த அரசியல் முழுவதும்  உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவன அதிபல் பில்கேட்ஸ்  மற்றும் அவரது அறக்கட்டளையை சுற்றியே  சுழன்று வருகிறது.

பில் அன்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் (Bill and Melinda gates foundation) உலக நாடுகளிடையே சுகாதாரத்தை வலியுறுத்தி, அதற்காக கோடி கோடியாக பணத்தைக் கொட்டி வருவது அனைவருக்கும் தெரியும்…

இதனால் உலக அளவில் பெரும் புகழ் பெற்றவராகவும், தாராள பிரபுவாகவும் காணப்படுகிறார் பில்கேட்ஸ்… ஆனால் அவரது மற்றொரு முகம் மிகவும் கோரமானது… இது சாதாரண மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை…

தற்போதும், பில்கேட்ஸ் அறக்கட்டளை கொரோனா வைரஸ் தடுப்புக்கு பெருமளவு நிதி கொடுத்துள்ள நிலையில், கொரோனா தொடர்பாக 6 ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுதான் தற்போது பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது.

மைக்ரோசிப் அரசியல்

இதைத்தான்  டிரம்பின் நண்பர் ரோஜர் ஸ்டோன், மைக்ரோசாப் நிறுவனர், பில்கேட்ஸ் ‘மைக்ரோசிப் அரசியல்’ செய்கிறார் என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனசாட்சியாக கருதப்படும் ரோஜர் ஸ்டோன் கொளுத்திப் போட்டுள்ள இந்த அதிர்ச்சி  தகவல் தற்போது பெரும் விவாதப்பொருளாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் தற்போது உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதப்பொருளாக மாறி உள்ளது.

ஏற்கனவே , சுகாதாரம் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மற்றும் தடுப்பு  நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் பில்கேட்ஸ் அறக்கட்டளை, சுகாதார நடவடிக்கை, நோய் தடுப்பு மருந்து என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக பல ஆய்வுகள் நடத்தி வருகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக கூறும் கேட்ஸ் அறக்கட்டளை, அதே மக்களை பகடைக் காய்களாக்கி பல்வேறு மருத்துவ சோதனைகளையும் மேற்கொண்டு, அதன்மூலம் மருந்துகளை தயாரித்து, விற்பனை செய்து  உலகின் ஏகபோக முதலாளியாக  திகழ்ந்து வருகிறார்.

பிட்கேட்சின் கோர முகம்

நோய் தடுப்பு மருந்து தயாரிக்கிறோம் என்ற பெயரில் அதற்கான சோதனைகள் அனைத்தும் வறுமையில் தள்ளாடும் மக்களை குறிவைத்தே நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டு மக்களை குறிவைத்து சோதனைகளை நிறைவேற்றி வருகின்றன கேட்ஸ் ஆய்வு நிறுவனங்கள். அவர்களின் உயிரோடு விளையாடி, அதன்மூலம் கண்டுபிடிக்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் மூலம் மற்றொருபுறம் கோடிக்கணக்கில் கல்லா கட்டி வருகிறது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், புதிய மருந்துகளுக்கானசோதனைகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை ஆப்பிரிகா, ஆசியா நாடுகளில் நடத்தியது.

2014–2015 ஆம் ஆண்டுவாக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலோ தொற்றுக்கு கேட்ஸ் அறக்கட்டளை பல்வேறு உதவிகள் செய்தது. இந்த தொற்று தொடர்பாக உலக நாடுகளிடையே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி, அதற்கான மருந்துகளை விற்பனை செய்து பெரும் லாபம் சம்பாதித்தது. கேட்ஸ் அறக்கட்டளையின் ஏகாதிபத்தியத்துக்கு உலகளாவிய சுகாதார நிர்வாகம்” (Global Health Administration)யும் ஒத்து ஊதி வந்தது.

மலேரியா தடுப்பூசியை 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மீது சோதித்தது. இதில்ஏராளமான அப்பாவிக் குழந்தைகள் மரணத்தை தழுவினர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, குற்றுயிரும், குலைஉயிருமாக கடுமையான பக்க விளைவு களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இது மட்டுமின்றி குழந்தைகளின் மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கும் “மெனின்ஜிட்டிஸ்” (Meningitis) என்ற நோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிப்பின்போதும் ஏராளமான ஆப்பிரிக்க குழந்தைகளை பலி கொடுத்ததுடன் பலரை முடநோயாளிகளாகவும் மாற்றியது.

ஆப்பிரிக்க பெண்களிடையே சுகாதாரத்திற்காகவும் குழந்தைகள் பெருக்கத்தையும் தடுக்கும் என பிரசாரம் செய்த மெலிண்டா,  அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கி, அவர்களின் வாழ்வில் விளையாடினார். அங்கு பெண்கள் டெப்போ-புரோவெரா ஊசி போடுமாறு வேண்டிக் கொண்டார் – “கணவர்களிடமிருந்து” (கோல்ட்பர்க் 2012) கருத்தடை பயன்பாட்டை மறைப்பதற்கான ஒரே வழி இது என்று கூறப்பட்டது.   இதில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டதால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

பல ஏழை நாடுகளுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு, அந்நாட்டின் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதற்காக பி.டி.பி. (Product Development Projects) என்ற பெயரில் மருந்துப் பொருள் அபிவிருத்திக்கான திட்டங்களை தயாரித்து, தமக்குச் சாதகமான வகையில், அந்த நாட்டு அப்பாவி மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தி வருகிறது.

நைஜீரியாவில் போலியோவை ஒழிக்க மருந்துகளை அனுப்பினார். தென் அமெரிக்காவில் மருந்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்தார். சார்ஸ் வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சிகளுக்கு அவ்வப்போது இவரின் தொண்டு நிறுவனம் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்தியாவிலும், கேட்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கிய  கர்டாஸில் மருந்தின் பக்கவிளைவு களால் ஆந்திராவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த பல சிறுமிகள் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது வெளியே தெரியாமல்  மறைக்கப்பட்டது.

மருத்துவ ஆராய்ச்சி என்ற பெயரில் சட்டவிரோத, சமூக விரோத, மனித உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற ஆராய்ச்சிகள், அதனால் ஏற்படும் சாவுகள், கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய படுகொலைகளே…

ஆனால், இந்த கொடுமைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வராமல் இருட்டிப்பு செய்யப்பட்டது.

மருந்து பரிசோதனை வெற்றி… வெற்றி… வெற்றி.. என எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூறியதுபோல,  பில்கேட்ஸ் உலக மக்களை ஏமாற்றி, அப்பாவி மக்களை பலிகடாகளாக்கி, அதன்மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தை விற்பனை செய்து செம லாபம் சம்பாதித்து வருகிறார்.

சோதனை என்ற பெயரில் ஏராளமானோரின் சாவு மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை  நிதியாக உலக நாடுகளுக்கு அள்ளிக்கொடுத்து, தாராள பிரபுவாக காட்சி அளிக்கிறார் கேட்ஸ்…

பில் கேட்ஸின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு மாபெரும் பயோ வார் என்று கடுமையாக சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.  ஆய்வாளர்கள் இது ஒரு  “அறக்கட்டளை முதலாளித்துவம்” (Philanthro Capitalism) என விமர்சிக்கிறார்கள்…

கொரோனா ஆய்வு மேற்கொள்ளும் பில்கேட்ஸ் நிறுவனம்

இந்த சூழ்நிலையில்தான்,  தற்போது பில்கேட்ஸ் தெரிவித்துள்ள கொரோனா ஆய்வு குறித்த தகவல்கள் கடுமையான விமர்சனங்கள் உருவாக்கி உள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் என்று தெரிவித்த பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

இதற்காக 7 நிறுவனங்களை களமிறக்கி, இந்த 7 நிறுவனங்களும் தனி தனியாக வெவ்வேறு மருந்துகளை கண்டுபிடிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.  அந்த நிறுவன ஆய்வுகளின் முடிவில், 2 நிறுவனத்தின் மருந்துகள் மட்டுமே பலன் அளிக்கும் என்றும், அதில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்து உள்ளர்… இதற்காக   100 மில்லியன் டாலர்களை  பில் கேட்ஸ் அறக்கட்டளை வழங்கி உள்ளது.

இதையடுத்து  INO-4800 என்ற கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் மும்முரமாக களமிறங்கி உள்ளது. குறைந்தது 1 வருடத்திற்கு இந்த INO-4800 மருந்து மூலம் சோதனை செய்யப்பட உள்ளது.  இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பலநூறு பேரிடம் சோதனை செய்யப்பட்டு, அதில் இறுதியாக 2 மருந்துகள் தேர்வு செய்யப்படும் என்று  பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

இதன்மூலம், மீண்டும் பில்கேட்ஸ் ஆய்வு நிறுவனங்கள், சோதனை என்ற பெயரில் மீண்டும் தனிதர்களிடையே வைரஸ் ஊசியை செலுத்தி,  மனித சோதனைகளைத் தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ  பில் கேட்ஸ்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு பில்கேட்ஸ் பேசியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

2015ம் ஆண்டு பில்கேட்ஸ் பேசியது என்ன?

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு (2019) டிசம்பரில்தான்  சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பில்கேட்ஸ் கடந்த 2015ம் ஆண்டே  புதிய நோய்த்தோற்று குறித்து பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேட்ஸ்,, உலகம் முழுக்க வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்று மறைமுமாக  எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

எபோலா நோய் வந்தால் உடனே அறிகுறி தெரிந்துவிடும்… இதனால் பல பணக்கார நாடுகள் எளிதில் தப்பித்து விட்டது, ஆனால்,  நமக்கு இதுபோல் மற்றொரு வாய்ப்பு கிடைக்காது… வேறு ஒரு வைரஸ் இப்படி உருவானால், அதிலிருந்து நாம் தப்பிப்பது கடினம், அதுபோல எந்தவித அறிகுறியே இல்லாமல் உலகம் முழுக்க வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது கொரோனாவின் தாக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறதோ, அதை அப்போதே அவர் விவரித்து இருந்தார்.. அவரது அன்றைய பேச்சு அப்போது பெரும் வரவேற்பு பெற்றது.

ஆனால்,  தற்போது அதுதான் அவர் மீதான சந்தேகங்களை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது.  கடுமையான விமர்சனங்களையும் சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.

கேட்ஸ் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டதா?

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கு அவரது நிறுவனமும், அவரும்தான்  காரணமா?

கொரோனா தடுப்பு மருந்து என்ற பெயரில் மனித உயிர்களை பலிகொடுக்க மீண்டும் முயல்கிறரா?

நோய் தடுப்பு மருந்து என்ற பெயரில் உலக நாடுகளுக்கு அதை விற்பனை செய்து கோடிகோடியாக பணத்தை அள்ள நினைக்கிறாரா?

பின்னால் வருவதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கேட்ஸ் எப்படி கணித்தார்?

ஏற்கனவே நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதாக கூறி ஏராளமானோர் உயிர்களை பலிவாங்கி யுள்ள கேட்ஸ் நிறுவனம், கொரோனா நோய்த் தொற்று குறித்தும் ஏற்கனவே ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

என பல அடுக்கடுக்கான கேள்விகள் ஆய்வாளர்கள் , அறிவியலாளர்கள் என பல தரப்பினரும் எழுப்பி வருகின்றனர்.

இதைத்தான் தற்போது  ரோஜர் ஸ்டோன் , கேட்ஸ் மீது நேரடியாக குற்றம் சுமத்தி உள்ளார்.  இதை விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி, பில் கேட்ஸ். மக்கள் கையில் மைக்ரோசிப்களை பொருத்தவும், அவர்களை எப்போதும் கண்காணிக்கவும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளார் என்று நம்புகிறேன் என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் சுமத்தி உள்ளார்..

இது இன்று உலக நாடுகளின் ஆய்வாளர்களாலும், விஞ்ஞானிகளாலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் தடுப்பு குறித்து சீனாவை பில்கேட்ஸ் வாழ்த்தி பேசியதும், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக அனைத்து நாடுகளும் நினைத்துக்கொண்டிருக்கையில், பில்கேட்ஸ் சீனா குறித்து கூறிய தகவலும் விவாதப்பொருளாகி வருகிறது.

தற்போது கொரோனா மருந்து சோதனை  என்ற பெயரில், மனிதர்களிடையே சோதனை நடத்த,  வறுமையில் வாடும் சில ஆப்பிரிக்க நாடுகள் மீது மீண்டும்  கண் வைத்துள்ளது அவரது பேச்சு மூலம் தெரியவருகிறது.

இதற்கு ஆதாரமாக ஏற்கனவே பல நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.. தொற்றுநோய்களுக்கான ஆயத்தத்திற்கான கூட்டணி (CEPI) நிதியளித்த பல திட்டங்களில் இன்னோவியோ மற்றும் அதன் சாத்தியமான COVID-19 தடுப்பூசி ஒன்றாகும், மேலும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து குறிப்பிடத்தக்க நிதியையும் பெற்றுள்ளது.

இனோவியோவின் தடுப்பூசி சக அமெரிக்க நிறுவனமான மாடர்னா தெரபியூட்டிக்ஸின் முயற்சிகளைப் பின்பற்றுகிறது,  கடந்த மார்ச் 16 அன்று மனித சோதனைகளில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொற்று நோயை உருவாக்கி, பின்னர் அதற்கு தடுப்பு மருந்து என்ற பெயரில், உலக நாடுகள் இடையே அந்த மருந்துகளை வர்த்தகம்  செய்து கோடிக்கணக்கில் கல்லாக்கட்ட பில்கேட்ஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளதோ  என்று அஞ்சப்படுகிறது.

இந்த பில்கேட்ஸ் அறக்கட்டளைதான்,  கடந்த ஆண்டு (2019) இந்திய பிரதமர் மோடியின் ‘ஸ்வாச் பாரத்’ எனப்படும் ‘தூய்மை இந்தியா’ திட்ட அமலாக்கத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ வழங்கி கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான உலகின் வளர்ச்சி மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறதோ…