தற்போதைய உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது யார்?

உலகத்தின் பணக்காரர்கள் பட்டியல் என்றால் அதில் பில்கேட்ஸ் தான் நினைவுக்கு வருவார். 24 ஆண்டுகள் உலக பணக்காரராகத் தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்து வந்தாலும் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 2018 இல் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர் ஆனார். ஆனால், இப்போது அவரும் பின்தள்ளப்பட்டிருக்கிறார்.

ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்குப் போனதற்குக் காரணம், அமேசான் நிறுவனத்தின் பங்குகளில் 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததே ஆகும். இதனால் பெசோஸ் அவரது நிறுவனமான அமேசான் பங்கில் 7 பில்லியன் (அமெரிக்க டாலர்), இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் கோடியை இழக்க, அவரது சொத்து மதிப்பு குறைந்து 103.9 பில்லியன் அமெரிக்க டாலராகியது. இது இந்திய மதிப்பில் 7.37 லட்சம் கோடியாகும்.

இதற்கு முன்பாக பில் கேட்ஸ், 105.7 பில்லியன் அமெரிக்க டாலருடன் (7.502 லட்சம் கோடி) இரண்டாம் இடத்தில் இருந்து வந்தார். தற்போது ஜெஃப் பெசோஸுக்கு சொத்து மதிப்பு குறைந்து 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக, பில்கேட்ஸ் மீண்டும் 7.502 லட்சம் கோடியுடன் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

அமேசான் நிறுவனர், 1998ஆம் ஆண்டுதான் உலகில் 400 பெரிய பணக்காரர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார். ஆனால், அவர் விரைந்து முன்னேறி உலகிலேயே பெரிய பணக்காரராக 2018 இல் திகழ்ந்தார்.

கார்ட்டூன் கேலரி