நெதர்லாந்து

உலக கோடீசுவரர்களில் ஒருவரான பில் கேட்ச் 64.4 கோடி டாலர் (ரூ.4519 கோடி) க்கு ஒரு உல்லாசக் கப்பலை வாங்கி உள்ளார்.

உலகக் கோடீசுவரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 110 லட்சம் கோடி டாலர்கள் ஆகும்.   இவர் இப்போது உலக செல்வந்தர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.  இவர் சுற்றுச் சூழல் மாசு அடைவதைத் தடுப்பதில் மும்முரமாக உள்ளார்.  இவர் கலிபோர்னியாவில் மாபெரும் சூரிய ஒளி மின்சாரப் பண்ணை அமைத்துள்ளார்.

இவ்வளவு செல்வந்தரான பில் கேட்ஸ் தாம் விடுமுறை சுற்றுலா செல்லும் போது உல்லாசக் கப்பலை வாடகைக்கு எடுத்துச் செல்வது வழக்கமாகும்.  தற்போது இவர் சொந்தமாக ஒரு உல்லாசக் கப்பலை வாங்க உள்ளார். அகவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் உல்லாசக் கப்பலில் 5 தளங்கள் உள்ளன.

இதில் 14 விருந்தாளிகளும் 31 சிப்பந்திகளும் செல்ல முடியும்.   இதில் நீச்சல் குளம், ஹெலிகாப்டர் தளம், உடற்பயிற்சி சாலை, அழகு நிலையம் உள்ளிட்டவை உண்டு.   நெதர்லாந்தைச் சேர்ந்த சினோட் என்னும் நிறுவனம் தயாரித்த இந்தக் கப்பல் சென்ற வருடம் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த கப்பலில் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இது பில் கேட்ஸை மிகவும் கவர்ந்ததால் உடனடியாக இதை வாங்கி உள்ளார்.    இந்த கப்பல் தற்போது அழகு படுத்தப்பட்டு வருகிறது.  இந்த கப்பல் வரும் 2024 ஆம் வருடத்துக்குள் கடலில் மிதக்கத் தயாராகும் என சினோட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கப்பலில் பயணிப்போர் குளிர் காயக் கரி அல்லது மரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதில்  எரிவாயு பயன் படுத்துவது மற்றொரு சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சமாகும்.   இந்த கப்பலில் விலை என்ன தெரியுமா? 64.4 கோடி டாலர்கள் மட்டுமே.  அதாவது 4591.68 கோடி ரூபாய் ஆகும்.