வாஷிங்டன்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பில் கேட்ஸ் நிறுவன போர்டில் இருந்த்து விலகுகிறார். கேட்ஸ் முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2008 வரை பணியாற்றினார். அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிக நேரம் செலவிடுவதற்காக பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அறக்கட்டளை பணிகளுக்கு அதிக நேரம் செலவிடவே மைக்ரோசாப்ட் போர்டில் இருந்து விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் குழுவின் தலைவராக பணியாற்றுவதிலிருந்து விலகியபோது, ​​2014 ஆம் ஆண்டில் நாடெல்லாவின் வேண்டுகோளின் பேரில் கேட்ஸ் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் “தொழில்நுட்ப ஆலோசகராக” பணியாற்றினார்.

இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக பில் உடன் இணைந்து பணியாற்றியது ஒரு பெரிய பாக்கியம். மென்பொருளில் புதிய நம்பிக்கையுடன் சமூகத்தின் மிக முக்கியமான சவால்களைத் தீர்ப்பக்கும் ஆர்வத்துடன் பில் எங்கள் நிறுவனத்தை நிறுவினார்  என்று நடெல்லா ஒரு அறிக்கையில் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பில்லின் தலைமை பண்பு மூலம் எங்கள் குழு பயனடைந்துள்ளது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முன்னோக்கி நகர்த்துவதற்கான பில்லின் தொழில்நுட்ப ஆர்வம் மற்றும் ஆலோசனையிலிருந்து மைக்ரோசாப்ட் தொடர்ந்து பயனடைகிறது. பில்லின் நட்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவருடன் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற் எதிர்பார்க்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.