டில்லி:

மோடி அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கவர்ச்சிகர மான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா குறித்து இன்று விவாதம் நடைபெற உள்ளது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் நிதி முதலீடு போன்றவற்றில் கவர்ச்சிகரமான வட்டி உள்பட பல்வேறு சலுகைகளை அளிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. இதை தடுக்கும்பொருட்டு, கவர்ச்சிகரமான வட்டி அளிப்பதாக கூறும் மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கோண்டு வந்துள்ளது.

மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோ தாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது,  மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பதுடன், மோசடி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் அளிக்க வகை செய்கிறது. மேலும், அவர்களின் சொத்துகளை பறிப்பதற்கும் இதில் இடம் உள்ளது என்றும்,  ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கும் மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இம்மசோதா மீதான விவாதம்  இன்று மக்களவையில் நடைபெறுகிறது.\