பொதுவாக உலகில் பெரும் பணக்காரரர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை விரும்புவதில்லை. ஆனால் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு,  இதை செய்ய பில் கேட்ஸ் தயாராக உள்ளார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், பில்லியனரும்  மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் வெற்றி அடைவதில் கிட்டத்தட்ட உறுதியான ஏழு தடுப்பு மருந்துகளுக்கு தேவையான  தொழிற்சாலைகளைத் தொடங்க, அதுவும் இறுதி ஆய்வு முடிவுகள் வெளிவரும் முன்பே நிதி உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஏன்? இப்போதைய நெருக்கடியான நேரத்தில், பாரம்பரிய தடுப்பு மருந்து உருவாக்கம் பற்றிய  வரிசைப்படுத்தப்பட்ட வழிமுறைகளுக்கு  உலகம் காத்திருக்க முடியாது, எனவே சோதனையின் போதே உற்பத்தியை அதிகரிக்க உதவுவதை அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கேட்ஸ் விளக்கமளித்துள்ளார். “எங்கள் ஆரம்பகால நிதி உதவி தடுப்பு மருந்து தயாரிப்பைத்  துரிதப்படுத்தும்,” என்று கேட்ஸ் கூறினார். மேலும், இவர்களுடைய அறக்கட்டளை ஏழு “மிகவும் நம்பிக்கைக்குரிய” தடுப்பு மருந்துகளைத் தேர்வுசெய்து, உரிய தொழிற்சாலை வசதிகளுக்கு தேவையான நிதி உதவியை செய்ய முடிவு செய்துள்ளது. இறுதியில் ஏதேனும் இரு மருந்துகளை மட்டுமே தேர்வு செய்யவுள்ளோம் என்றாலும், ஏழு நிறுவனங்களுக்கு உதவி செய்வது உறுதியாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் சுமார் அடுத்த 18 மாதங்களிலேனும் தடுப்பு மருந்துகளை அனைவருக்கு கிடைக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், நாம் பாதுகாப்பை உறுதி செய்வதோடு உரிய உற்பத்தியையும் ஒரே நேரத்தில் உருவாக்க வேண்டும்” என்று கேட்ஸ் கூறினார். இந்த திட்டத்தின் விளைவாக “சில பில்லியன் டாலர்கள்” இழப்பு ஏற்படும் என்று அவர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், உலகம் இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, “அந்த ஒரு சில பில்லியன்கள் மிகவும் மதிப்பிற்கு உரியது. என்றார். இந்த முயற்சி ஒரு தடுப்பு மருந்து கிடைக்க தாமதமாகும் சில மாதங்களை மிச்சப்படுத்தும், இதனால் பொருளாதாரங்களை விரைவில் மறுதொடக்கம் செய்யலாம் என்றும் கூறினார்.

நூற்றுக்கணக்கான தனித்துவ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக மாடர்னா நிறுவனத்தின் மருந்து குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்திய ஃபியர்ஸ்ஃபார்மா மெய்நிகர் குழு, குளோபல் டேட்டாவின் தொற்று நோய்களின் இணை இயக்குனர் மைக்கேல் ப்ரீன் கூறும்போது, தடுப்பு மருந்து வெற்றிகரமாக இருந்தால், அது “வளர்ச்சி மற்றும் அவசரகால திட்டங்கள் மூலம் விரைவாக ஒப்புதல் பெற முயற்சிக்கலாம்” என்றனர். இன்னும் ஒரு ஆண்டிற்குள் நாம் தடுப்பு மருந்தை பெறுவது உறுதி என்றார். ஆனால், இன்னும் இன்னும் ஆய்வகத்தில் தயாரிப்பில் உள்ள ஒரு தடுப்பு மருந்துக்கு விதிவிலக்கை விட விதிமுறைகள் அதிகம்” என்று அவர் ஒப்புக் கொண்டார். ஏற்படும் பின்னடைவுகள் மருந்து பெறுவதை 18 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் வரை தாமதப்படுத்தலாம் என்றார்.
மாடர்னா திட்டத்தைத் தவிர, பல பெரிய பார்மா நிறுவனங்கள் COVID-19 தடுப்பு மருந்தை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

ஒரு செயல்படும் தடுப்பு மருந்தின் அவசர தேவை தெளிவாக உள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நாட்டிலும் பரவியுள்ளது. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை வைரஸ் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதையும் பற்றிய எச்சரிக்கைகளை வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். முடிவில், ஒரு வெற்றிகரமான தடுப்பு மருந்தே  உலகளாவிய தொற்றுநோய்க்கான பாதுகாப்பு கவசமாக இருக்க முடியும்.  நோய்த்தடுப்பு மருந்துகளை முதலில் பயன்படுத்தத் தொடங்கும் நாட்டிற்கு இது ஒரு பெரிய பொருளாதார நன்மையையும் அளிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பின்னணியில், ஒரு தடுப்பு மருந்தை அங்கீகரிப்பதற்கான கடுமையான அரசியல் அழுத்தத்தையும் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஆனால், அதே சமயம், அதிகப்படியான அழுத்தம் தரம் மற்றும் சோதனைத் தேவைகளைக் குறைக்கக்கூடிய அபாயம் உள்ளதையும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

 
“புவிசார் அரசியல் பதட்டங்கள் ஏற்கனவே COVID உடன் தெளிவாகக் காணப்படுகின்றன. மேலும் இது விரைவாக தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான அழுத்தங்களையும் அளிக்கிறது. தடுப்பு மருந்து ஒப்புதல் பற்றி முடிவெடுப்பதற்கான சிறந்த வழி இதுவல்ல என்றும் விவாதிக்கப்படுகிறது. “COVID தடுப்பு மருந்தின் ஒப்புதல் குறித்த தேவைகள் பற்றிய உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இதன் மூலம், அரசியல் சார்ந்த அழுத்தங்கள் ஒதுக்கப்படும். ஆனால், இது பல்வேறு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும், என்றும் வல்லுனர்கள் கூறியுள்ளனர். பொறுத்திருப்போம்!!!
Thank you: Fierce Pharma
Author: Eric Sagonowsky