உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்த பில் கேட்ஸ்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸை முந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு முதல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்ததால் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு சென்றார். அமேசான் நிறுவனத்தின் சிஇஒ பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ததால், தனது சொத்துகளில் கணிசமான பகுதியை அவருக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் காரணமாகவும் அவரது சொத்து மதிப்பு குறைந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு இறங்க நேர்ந்தது.