ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் திருமணம் செய்துள்ளார் – உறவினர்கள்

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் திருமணம் செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை செலுத்திய முகமது அட்டாவின் மகளை ஹம்சா பின்லேடன் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

hamzabin

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது தாக்குதலை நடத்தினார். விமானத்தை செலுத்தி இரண்டு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் ஒசாமா பின்லேடனை குற்றவாளியாக்கி அவரை கொல்ல முடிவெடுத்தன. அதன் ஒரு பகுதியாக பழித்தீர்க்கும் பொருட்டு 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாக்கிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி கொன்றனர். இந்த செயலுக்கு அமெரிக்கா உலக நாடுகளின் வாழ்த்துக்களை பெற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து தனது தந்தை மரணத்திற்கு காரணமான அமெரிக்காவை அழிக்கவும், அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்தவும் ஒசாமாவின் இளைய மகன் ஹம்சா பின்லேடன் சபதம் ஏற்றார்.

அதன்படி அல்கொய்தா அமைப்பில் குறிப்பிடும் பொறுப்பில் ஹம்சா பின்லேடன் இருந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தி கார்டியன் நாளேட்டிற்கு பேட்டியளித்த ஒசாமாவின் தாய் ஆலியா கான், ஒசாமா மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக கூறினார்.

Osamason

இந்நிலையில், ஹம்சா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த முகமது அட்டாவின் மகளை திருமணம் செய்து கொண்டதாக பின்லேடனின் சகோதரர்கள் அகமது மற்றும் ஹசன் அல் அட்டாஸ் உறுதி செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் “ எங்கள் சகோதரர் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன் முகமது அட்டாவின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார் என்று அறிந்தோம். ஆனால் இப்போது, ஹம்சா குடும்பத்துடன் எங்கு தங்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை” என்று தெரிவித்தனர்.

ஒசாமாவின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க அமெரிக்கா நினைத்தது. அல்கொய்தா அமைப்பில் இருந்த ஒசாமாவின் மகன் காலித்தை, அபோதாபாத் ரெய்டின் போது, அமெரிக்கப் படைகள் சுட்டுக்கொன்றன. ஒசாமாவின் மற்றொரு மகன் சதாத் 2009-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். எஞ்சி இருக்கும் ஹம்சா தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேலுக்கு எதிராகத் தீவிரமாக போராடப்போவதாக ஹம்சா பின் லேடன் சவால் விட்டதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இவர்களை அழிக்கும் முயற்சியில் மேற்கத்திய நாடுகளின் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கார்ட்டூன் கேலரி