ட்ரெண்டாகும் #ranveerisjoker (ரன்வீர் ஒரு கோமாளி) என்கிற ஹாஷ்டேக்….!

ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இது அறிவியல் ஆர்வலரான சுஷாந்தைக் கிண்டல் செய்வது போல அமைந்திருப்பதாக சுஷாந்தின் ரசிகர்கள் கோபப்பட்டு ரன்வீரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

மேலும் ரன்வீர் ஒரு கோமாளி #ranveerisjoker என்கிற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனையும் இந்த ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. சுஷாந்த் இறந்த பிறகு ஒருவர் உடனடியாக மனநலம் பற்றிப் பேசுகிறார், இன்னொருவர் தனது விளம்பரத்தில் அறிவியல் பேசுகிறார். சுஷாந்த் இறந்த பின்பும் அவரை வைத்து ஆதாயம் தேடுவதா என்று சாடி வருகின்றனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட நிறுவனம், இந்த விளம்பரம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டதாகவும், இது எந்த நடிகரையும் கேலி செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.