அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு ‘பயோ மெட்ரிக்’: தமிழகஅரசு ஆணை

சென்னை:

ரசு பள்ளி பள்ளி ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்கும் வகையில், அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளுக்கு பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள  அரசு பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வருகை தராமல் தாமதமாக வருகை தருவதாகவும், சில ஆசிரியர்கள் பள்ளி நேரத்தின்போதே, பள்ளியில் இருந்து வெளியேறி விடுவதாகவும், பணிக்கு வராமலேயே வந்ததுபோன்று அடுத்த நாள் கையெழுத்து இடுவதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.

இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து அரசு  பள்ளிகளிலும், பயோ மெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த தமிழக அரசுஉத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள  7,728 உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து விரைவில் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக  ரூ.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.