டில்லி,

டுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரெயில்களிலும் உயிரிக் கழிப்பறைகள் (பயோ டாய்லட்) அமைக்க ரெயில்வே அமைச்சம் முடிவு செய்துள்ளது.

தற்போது ஒருசில ரெயில்களில் பரிசார்த்த முறையில் பயோ டாய்லட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ​2018ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில்களிலும் உயிரிக் கழிப்பறைகள் அமைக்க ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின்  அனைத்து ரெயில்களிலும் உயிரிக் கழிப்பறை அமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயில்களில் உள்ள அனைத்துக் கழிப்பறைகளையும் உயிரிக் கழிப்பறைகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டில் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாமல் ஆக்குவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டுவதற்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.

அதேவேளையில்,  விரைவு ரயில்களில் கழிப்பறைகளில் இருந்து விழும் கழிவுகள் தண்டவாளத்தில் விழுந்து அசுத்தம் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதை தடுக்கும் நோக்கிலேயே பயோ டாய்லட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.