அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவேடு: செங்கோட்டையன்

சென்னை:

டுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி களின்  ஆசிரியர்களின் வருகை பதிவேடும்,  பயோபெட்ரிக் முறையில் பதியப்பட்டு கண்காணிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,  வரும் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வை முறையாக நடத்துவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும்,  நீட் பயிற்சி மையங்களுக்காக தமிழக அரசு சார்பில் ரூ 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால்,  அதில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் 413 மையங்களும் தனியார் உதவியுடன் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சரியான  நேரத்தில் பள்ளிகளுக்கு பணிக்கு வராமலும், பள்ளி நேரத்தில் எந்தவித காரணமுமின்றி வெளியே செல்லும் ஆசிரியர்களுக்கும் ‘செக்’ வைக்கும் நோக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்பட உள்ளது.‘

அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை,  இனிமேல்  பயோமெட்ரிக் முறை மூலமே கண்காணிக்கப்பட்டு குறிக்கப்படும் என்றும்  அறிவித்துள்ளது.

இதற்காக  ரூ.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைக்கும் தமிழக கல்வித்துறையின்  நடவடிக்கை, ஓப்பி அடித்து வரும்  ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி