பறவை மோதி விமானம் பழுது!! பயணிகள் தப்பினர்

கொல்கத்தா:

கொல்கத்தாவில் ஏர்ஆசியா விமானம் தரையிறங்கிய போது பறவை மோதியதில் விமானம் சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.

துபாயில் இருந்து வந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று தரையிறங்கிய போது விமானத்தின் இடதுபுற எஞ்ஜின் பகுதியில் பறவை ஒன்று மோதியது. இதில் விமானம் சேதம் அடைந்தது.

இருப்பினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சேதம் அடைந்த எஞ்ஜினை பழுதுபார்க்க வேண்டியது உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து பயணிகள் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல மாற்று விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.