சென்னை:

வுடிகள் முன்னிலையில் அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய  பிரபல ரவுடி பினு நேற்று  நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் பினு.  பிரபல ரவுடியான இவர்மீது, ஆள் கடத்தல், கொலை, காள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.  இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ந்தேதி அன்று தனது  பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்,  பூந்தமல்லி அருகே உள்ள மலையாம் பாக்கத்தில்  அரிவாளால் கேட் வெட்டியும், ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாடங்களுடன் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரவுடிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது, சுமார் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர். இருந்தாலும் ரவுடி பினு உள்பட  50க்கும் மேற்பட்டோர் தப்பி விட்ட நிலையில் ஓரிரு நாட்களில் சரணடைந்தார். பின்னர் ஜாமினில் வெளியான பினு கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று  நள்ளிரவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  எழும்பூர் பகுதிக்கு வந்த ரவுடி பினுவின் சொகுசு கார், காவல் துறையினரை கண்டதும், அருகே உள்ள சந்துக்குள் புகுந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த காரை நோட்டமிட்டு, பின் தொடர்ந்தனர்.

பின்னர் காரை மடக்கி சோதனையிட்ட போது, காருக்குள் ரவுடி பினு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை துப்பாக்கி முனையில் அவனைக் கைது செய்த போலீசார், எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.