டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்நாள் பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் 13வது பிரதமரான  மன்மோகன் சிங் சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றியவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை அவர் பிரதமர் பதவிக்கு அழகு சேர்த்தார். பொருளாதார மேதையான அவரது ஆட்சி காலத்தில், நாட்டின் வளர்ச்சி விண்ணை எட்டியது. இன்று , அவருக்கு 88வது பிறந்த நாள்.. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  “டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க இறைவனை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.