நெட்டிசன்:
காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும்  போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.    17,18 தேதிகளில் 48 மணி நேர தொடர் மறியல் நடந்தது.
இந்த மறியலில் பாஜக, அதிமுக உட்பட சில கட்சிகள் தவிர தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சிகள் அனைத்தும்  கலந்துகொண்டன. தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தை ஒருங்கிணைத்து போராட்டம் அறிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.  கைது செய்யப்பட்ட அவர் ஓட்டெரியில் உள்ள ஏசி மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டார்.
1
அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அந்த ஏசிமண்டபத்தில் பாட்டு பாடி கொண்டாட்டமாக இருந்தனர்.  போராட்டம் குறித்து அங்கு தலைவர்கள் யாரும் பேசவில்லை. அனைவரும் சாப்பிட பிரியாணி ,சிக்கன் 65 வழங்கப்பட்டது. இந்த காட்சிகள் வாட்ஸப் உட்பட சமூகவலைதளங்களில் வைரலாக பரவி விமர்சிக்கப்பட்டு வருகிறது.
“இதற்கு முன்னர் நடந்த போராட்டத்தில் சமூக நலக்கூடம் ஒன்றில் மு.க. ஸ்டாலின் அடைக்கப்பட்டார். அப்போது அவர் புழுக்கம் தாளாமல் தவித்துப்போய்விட்டார். ஆகவே இந்த முறை ஏசி மண்டபம் வேண்டும் என்று திமுகவினர், காவல்துறையுடன் பேசி ஏற்பாடு செய்தார்கள்” என்று கூறப்படுகிறது.
அதுமட்டுல்ல… பொதுவாக இப்படி போராட்டங்களில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு சாப்பாடு காவல்துறையினரே அருகில் உள்ள ஓட்டலில் வாங்கித்தருவார்கள் ஆனால் இந்த முறை ரயில் மறியல் போராட்டத்தில்  கைதாகி ஏசி மண்டபத்தில் அடைக்கப்பட்ட தி.மு.க.வினருக்கு ஸ்பெசலாக மதியம் கட்சியினரே பிரியாணி , சிக்கன் பீஸ் வரவழைத்து வழங்கினர்.  மாலையில் மீண்டும் சிக்கன் 65 மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
“தமிழ விவசாயிகள் காவிரி நீரின்றி தவிக்கிறார்கள்.  இதனால் தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்து கிளம்பி உள்ளது. விவசாயிகள் தண்டவாளத்தில் சோறு சமைத்து சாப்பிடுகிறார்கள். மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து சாதாரண மண்டபத்தில் அடைக்கப்பட்டு காவல்துறையினர் தந்த உணவை சாப்பிட்டு மாலையில் விடுதலையானார்கள்.   தஞ்சையில் நாள்  முழுதும் தண்டவாளத்திலேயே விவசாயிகள் சாப்பிடாமல் போராடினர் .
ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவின் முக்கிய தலைவரான ஸ்டாலினுடன் கலந்துகொண்ட திமுகவினருக்கு மட்டும்  ஏசி மண்டபம், பிரியாணி, சிக்கன் 65 அளிக்கப்பட்டதே.  காவிரி விவகாரத்தில் திமுகவினருக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என வாட்ஸ் அப் உட்பட சமூகவலைதளங்களில் கடுமையாக பலர் விமர்சித்து வருகிறார்கள்.
2
அதே நேரம், திமுக அபிமானிகள், “காலம் மாறிவிட்டது.  இந்த சூழலில் போராட்டத்தில் கலந்துகொண்டதுதான் முக்கியமே தவிர, எங்கு தங்க வைக்கப்பட்டா்கள், என்ன சாப்பிட்டார்கள் என்பதை எல்லாம் ஆராய வேண்டியதில்லை” என்று பதில் சொல்லி வருகிறார்கள்.
பாம்பு பல்லி நடுவினிலே.. பாளையங்கோட்டை சிறையினிலே.. என்ற திமுக பாடல்தான் நினைவுக்கு வருகிறது!