டில்லி:

பிஸ்கட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க வேண்டும் என்று  பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதிஅமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கை, ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு போன்ற  காரணங்களால் இந்திய பொருளாதாரம் வரைலாறு காணத அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. அதன் காரணமாக சிறு மற்றும் குறு தொழில்கள் அடியோடு முடங்கி உள்ளது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்துக்கு  தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரபல பிஸ்கட் நிறுவனமான பாரம்பரியம் மிக்க பார்லே நிறுவனமும், தனது ஒருசில தொழிற்சாலைகளை மூடி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் இருந்து மத்திய நிதி அமைச்சருக்கு,  ஜிஎஸ்டி வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

வரும் 20ந்தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது பிஸ்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித ஜிஎஸ்டி வரையை 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிஸ்கட் தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பிஸ்கட் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு (பி.எம்.டபிள்யூ.ஏ -Biscuit Manufacturers Welfare Association (BMWA)) தலைவர் ஹரேஷ் தோஷி எழுதியுள்ள கடிதத்தில்,  ஒரு கிலோவுக்கு ரூ .100 வரை விலை நிர்ணயிக்கப்பட்ட நுழைவு நிலைதொடக்க நிலை  பிஸ்கட்டு களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும், ஜிஎஸ்டி ஆட்சி தொடங்குவதற்கு முன்பு, ஒரு கிலோ ரூ .100 க்கும் குறைவான பிஸ்கட் கலால் விலக்கு அளிக்கப்பட்டது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, அனைத்து பிஸ்கட்டுகளும் 18% ஜிஎஸ்டியுடன் விதிக்கப்படு கின்றன. ஒரு கிலோ ரூ .100 க்குக் குறைவான பிஸ்கட்டுகளுக்கு 5% மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி “நுகர்வோர் ஒழுங்கமைக்கப்படாத பிரிவைச் சார்ந்து இருக்கவும், தொழில்துறையை அதன் உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும், நிறுவப்பட்ட திறன்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்தவும், தேவையை புதுப்பிக்கவும் உதவும்” என்று அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியஹரேஷ் தோஷி,   கடந்த சில மாதங்களாக மலிவு பிஸ்கட் நுகர்வு படிப்படியாக குறைந்து வருவதாகக் கூறினார். பிஸ்கட் மற்றும் வாகனத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான வரி திருத்தங்களை பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

கிலோ ஒன்றுக்கு ரூ .100 வரை விற்பனை மதிப்புள்ள பிஸ்கட்டுகளில் ஜிஎஸ்டியை தற்போதுள்ள 18%ல் இருந்து 5% ஆக குறைக்க வேண்டும் என்றும், இது வெகுஜன மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்றும் என்றும் தெரிவித்து உள்ளார்.