ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்த பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகளில் வேஃபர் பிஸ்கட் முதலிடத்தில் உள்ளது. சாப்பிடு வதற்கு சுமூத்தாகவும், ருசியாகவும் இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் இந்த வகையான பிஸ்கட்டுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்த பிஸ்கட்டுகளில் உள்ள கிரிம்கள் தரமில்லாதவை என பல புகார்கள் உள்ளன. இந்த நிலை யில்,  தெலுங்கானா மாநிலத்தில்  வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட இரண்டுக் குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமையன்று  பிரபல நிறுவனத்தின்  பிஸ்கெட் நிறுவனத்தின் க்ரீம் வேஃபர் பிஸ்கெட்டை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம் அடைந்தனர்.  இறந்த குழந்தைகளின் உடற்கூறாய்வில், குழந்தைகள் சாப்பிட்ட உணவு கெட்டு போனது தெரிய வந்துள்ளது. இதையடுத்து குழந்தைகள் சாப்பிட்ட பிஸ்கெட்டின் மாதிரிகளும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரபலமான அந்த  பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தயாராக இருந்த பிஸ்கட், மற்றும்  பிஸ்கெட் தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருள்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏறப்டுத்தி உள்ளது.