சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாய் திரைக்கு வந்த படம் பிஸ்கோத். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார்.

படத்தின் ட்ரைலரிலே பாகுபலி படத்தையும், 300 பருத்திவீரர்கள் படத்தையும் கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தது.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியது. பாடல்களின் லிரிக் வீடியோக்களை தொடர்ந்து ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஓப்பனிங் பாடலான வெற்றிமுனை வேல் பிடித்த பாடல் வீடியோ வெளியானது. பம்பா பாக்யா பாடிய இந்த பாடல் வரிகளை கிருட்டியா எழுதியுள்ளார்.