புதுடெல்லி: மெய்நிகர் நாணயம் என்றழைக்கப்படும் 1 பிட்காய்ன் என்பதன் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு கோடிகள் என்ற நிலைக்கு உயர்ந்து வருகிறது.

சமீபத்திய நிலவரப்படி 1 பிட்காய்ன் விலை, இந்திய மதிப்பில் ரூ.17.03 லட்சம் என்ற உயரத்தை எட்டியிருக்கிறது. பிட்காய்ன் மதிப்பு, நடப்பாண்டில் மட்டும் 220%அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதன் மதிப்பு விரைவில் 4 லட்சம் டாலர், அதாவது, இந்திய மதிப்பில் ரூ.2.96 கோடியை எட்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டது பிட்காய்ன். கொரோனா காலத்தில், தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றின் விலைகளில் அதிக ஏற்ற – இறக்கங்கள் இருந்த நிலையில், பிட்காய்ன் மீதான முதலீடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.