பிட் காயின் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது : இந்திய முஸ்லிம் வாரியம்

டில்லி

பிட் காயின் எனப்படும் ரொக்கமில்லா பணம் இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

பிட் காயின் உள்ளிட்ட அனைத்து கிரிப்டோ கரன்சிகளும் ரொக்கமில்லா பணம் என்னும் அடிப்படையில் உள்ளன.   இவைகளின் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்.   ஆனால் நோட்டுகளாக இருக்காது.  ஆன்லைன் மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படும் இந்த பணத்துக்கு ஒவ்வொரு நாளும் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

இந்த பண வர்த்தகம் உலகெங்கும் பரவி வரும் வேளையில் கடந்த ஜனவரி மாதம் எகிப்து நாட்டின் இஸ்லாமிய தலைவர் பிட் காயின் போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுவது இஸ்லாத்துக்கு எதிரானது எனவும் அவ்வாறு வரத்தகம் செய்வோருக்கு ஃபத்வா என்னும் மரண தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.   அத்துடன் துருக்கு, அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் கிரிப்டோ கரன்சி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.

இதை ஒட்டி அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரிய தலைவர் மௌலானா வாலி ரஹ்மானி, “இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இந்த பிட் காயின் போன்ற வர்த்தகங்களில் ஈடுபடக் கூடாது.   இந்த வகை பணத்தின் மூலம் குற்ற நடவடிக்கைகள் அதிகறிக்கும்.  மேலும் இவைகளால் பண மோசடி, போதை மருந்துகள் போன்ற இஸ்லாத்துக்கு எதிரானவைகள் வளர்ச்சி அடையும்.” என தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே பிட் காயின் உள்ளிட்ட அனைத்து கிரிப்டோ கரன்சிகள் பரிவர்த்தனைக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may have missed