பிட்: உள்ளாடைகளுக்குள் அதிநவீன கருவிகளை மறைத்த மாணவி

ஜெர்மனியில் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவி ஒருவர் தனது உள்ளாடையில் அதிநவீன கருவிகளை மறைத்து வைத்திருந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

g_liveday_husnsj

ஜெர்மனி நாட்டின் நார்த் ரைன் வெஸ்ட் பாலியா மகாணத்தின் சன்டெர்ன் நகரை சேர்ந்த  22 வயது இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதினார்.   அவரது நடவடிக்கைகள்  தேர்வறையில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு  சந்தேகத்தை எழுப்பியது. ஆகவே  அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உள்ளாடையில் அதிநவீன காமெரா கருவியை பொருத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கருவிகள் மூலம், வினாத்தாளை வேறு எங்கோ இருப்பவர்கள் அச்சு அசலாக பார்க்க முடியும். அதை வைத்து அவர்கள் விடைகளை கூறுவர். அதை தனது காதில் மாட்டியிருக்கும் ஹெட் போன் மூலம் கேட்டு இந்த மாணவி எழுதிவிடுவார்.

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஜெர்மனி காவல்துறையினர்,  இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.